ஹீரோ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வந்த டாக்டர், அயலான் என்ற இரண்டு படங்களில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். இதில் டாக்டர் படத்தை நெல்சனும், அயலான் படத்தை ரவிக்குமாரும் இயக்கினர். சில தினங்களுக்கு முன் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் துவங்கி உள்ளன.
ஏலியனை மையமாக வைத்து உருவாகும் அயலான் படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளது. இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
டாக்டர் டீசர்
‘டாக்டர்’ படத்தின் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17-ம் தேதி வெளியாக உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார்.