இந்தி படத்தில் வில்லனாக விஷால்

12

விஷால் வில்லனாக நடிக்கிறார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து 2018-ல் திரைக்கு வந்த இரும்புத்திரை படம் வெற்றிகரமாக ஓடியது. இதில் கதாநாயகியாக சமந்தாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்து இருந்தனர். இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுனின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஷாலை அணுகி உள்ளனர்.

முதலில் இரும்புத்திரை கதையை கேட்டதும் வில்லன் வேடத்தில் நடிக்கத்தான் விஷால் விருப்பம் தெரிவித்தார். பின்னர் அர்ஜுனை வில்லனாக்கினார்கள். தகவல்களை திருடும் சைபர் குற்றங்களை மையப்படுத்தி இரும்புத்திரை படம் தயாராகி இருந்தது.

கதாநாயகர்கள் வில்லன் வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அர்ஜுன், கார்த்திக், அரவிந்தசாமி, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.