எம் ஜி ஆர் மகன், இரண்டாம் குத்து தீபாவளிக்கு ரிலீஸ்

தியேட்டரில் பட்டாசு சத்தம் கேட்க தயார்

23

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதிமுதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் தமிழகத்தில் இந்த மாதம் (நவம்பர்) 10ம் தேதி முதல்தான் தியேட்டர்கள் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்தார். அதற்கு திரையுலகினர் நன்றி தெரிவித்த்ருக்கின்றனர்.

கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டுதல்படி 50% பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்க்க தியேட்டரில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தீபாவளி கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.  நவம்பர் 14 தியேட்டர்களில் தீபாவளி திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

 

ஜீவா அருள்நிதி நடித்துள்ள களத்தில் சந்திப்போம் என்ற படமும் சத்யராஜ் சசிகுமார் இணைந்துள்ள எம்ஜிஆர் மகன் படம், புதுமுகங்கள், சீனியர் நடிகர்கள் நடித்துள்ள பன்றிக்கு நன்றி சொல்லி படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருட்டறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயகுமார்   இயக்கி நடித்துள்ள இரண்டாம் குத்து படத்தை தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளார்.  மேலும் சில படங்கள் தீபாவளி ரேசில் பங்கேற தயாராகி வருகிறது

Leave A Reply

Your email address will not be published.