ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!.

1

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான் ஐஸ்வர்யா , கடந்த மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அதற்காகச் சிகிச்சை பெற்று மீண்டார். ’அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்தும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்றும் அதனால் தயவு செய்து முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார்.

அதில் இருந்து குணமடைந்த அவர், தற்போது மருபடியுன் காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் காரணமாக, மருத்துவமனையில் சேர்ந்துவிட்டேன். உங்களுடன் நேரம் செலவழிக்க, ஊக்கமளிக்கும் மருத்துவர்கள் இருந்தால், மருத்துவமனை அனுபவம் மோசமாக இருக்காது’ என்று தெரிவித்துள்ள அவர், மருத்துவர் பிரித்திகா சாரியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பெண்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர் பிரித்திகா சாரியை சந்தித்தது பெருமையானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.