ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பிறந்த தினம் இன்று

8

கேரள மாநிலம், பாலக்காட்டில், 1956 ஜன., 26ம் தேதி பிறந்தவர், பி.சி.ஸ்ரீராம். படித்தது, வளர்ந்தது எல்லாம், சென்னையில் தான். தன், 9வது வயதில், அவரது தாத்தா பரிசளித்த, ‘பிரவ்னி’ கேமராவில் ஆரம்பித்தது, இவருக்கு ஒளிப்பதிவு மீதான ஆர்வம்.சென்னை திரைப்படக் கல்லுாரியில், ஒளிப்பதிவு பயின்றார். விளம்பரங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். மவுனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அலைபாயுதே, ரெமோ, சைக்கோ மற்றும் பல ஹிந்தி  படங்களுக்கு, இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதுவரை, 45க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளார். கடந்த, 1992ல், ‘மீரா’ படத்தின் மூலம், இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய ‘குருதிப்புனல்’ படம், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ‘வானம் வசப்படும்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.