கொம்பு (பட விமர்சனம் )

56

படம் :கொம்பு
நடிப்பு : ஜீவா, திஷா பாண்டே, பாண்டியராஜன், சுவாமிநாதன்
தயாரிப்பு :பன்னீர் செல்வம்
ஒளிப்பதிவு : சுதீப்
இசை :தேவகுரு
இயக்கம் : இ. இப்ராஹிம்

திஷா பாண்டே பேய்களை ஆராய்ச்சி செய்யும் படிப்பு படிக்கிறார். கிராமம் ஒன்றில் அமானுஷ்யமாக தூக்கிட்டு சாகும் பெண்களை பற்றி ஆராய ஜீவா, பாண்டியராஜன் மற்றும் தோழியுடன் வருகிறார். குறிப்பிட்ட வீட்டுக்கு சென்று ஆராயும்போது சந்தேகம் வருகிறது. மந்திரவாதி வைத்திருந்த கொம்புவை தொட்டதால் அவர்கள் தூக்கிட்டு செத்ததாக ஊர்மக்கள் சொல்கிறார்கள். அது உண்மையா என்பதை ஜீவா, திஷா கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர் அவர்களால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்.
பேய், அமானுஷ்யம் கதையாக தொடங்கிறது கதை. பேய் ஆராய்ச்சி செய்யும் திஷா பாண்டே தைரியசாலியாக பேய் வீட்டுக்குள் செல்லும் காட்சிகள் திக் திக்.
ஜீவாவை சினிமா டைரக்டராக தொடக்கத்தில் காட்டுகிறார்கள். அவர் திஷாவுடன் சேர்ந்து பேய் ஆராய்ச்சியில் இறங்கி விடுகிறார். திஷா நேரடியாக பேயை மிரட்டும் விதத்தில் பேசுகிறார் ஜீவா பின்னணி யில் என்ன நடக்கிறது என்பதை சீக்ரெட்டாக துப்பறிகிறார்.

பாண்டியராஜனுக்கு அதிக வேலை இல்லை. அவரிடம் காமெடியை கொஞ்சம் இயக்குனர் கேட்டு பெற்றிருக்கலாம். முக்கால் வாசி படத்தை பேய் பயத்திலேயே நகர்த்தும் இயக்குனர் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் சஸ்பென்ஸை உடைப்பது அதுவரை அரங்கை ஆக்கிரமித்திருந்த பயத்தை விரட்டுகிறது.
எல்லாம் ஆசாமி வேலை என்று சொன்னாலும்
கொம்புக்கு மஞ்சள் துணி சுற்றி பயமுறுத்துகிறார்.
பாடல் காட்சிகள் ரிலாக்ஸ்.
இசை அதிகம் பயமுறுத்தாமல் தேவை யான இடத்தில் தடதடக்க வைக்கிறது. ஒளிப்பதிவு தெளிவு. இயக்குனர் இப்ராகிம் காட்சிகளை அழகாக கோர்த்திருக்கிறார்.
கொம்பு – பயம்

Leave A Reply

Your email address will not be published.