கோட்டா ( பட விமர்சனம்)

23

படம்: கோட்டா
நடிப்பு: செல்வா, பவாஸ் சுதா, சஜி அப்ர்ணா, நிகாரிகா.
இசை : ஆலன் செபாஸ்டியன்
ஒளிப்பதிவு: கவாஸ்கர் ராஜு
இயக்கம்: அமுதவாணன்
மனைவி, மகன், மகள் என மலை கிராமத்தில் வசிக்கும் ஏழை தொழிலாளியின் குடும்பம் வறுமையில் சிக்கி தவிக்கிறது. ஆனால் பிள்ளை களை படிக்க வைத்து அவர்கள் வாழ்க்கை செம்மையாக்க முயல்கிறார் தந்தை. இந்நிலை யில் அந்த குடும்பத்தில் திடீர் விபத்தில் உயிர்பலி ஏற்படு கிறது. அடுத்து அந்த குடும்பத் தின் கதி என்ன ஆனது என்பதை விளக்குகிறது படம்.


ஒரு ஏழை குடும்பத்தில் என்னவெல்லாம் கஷ்டம் தாண்டவமாடும் என்பதை அப்பட்டமாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.
குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் தந்தையே விபத்தில் பலியாகிறார் என்பது சோகத் திலும் சோகம். அதன்பிறகு அந்த குடும்பம் படும்பாடு கண்களை குளமாக்குகிறது.
குடும்பத்தலைவனாக நடித்திருக்கும் செல்வா எதர்த்த நடிப்பால் கவர்கிறார். அவரது மகளாக வரும் பவாஸ் சுதா அடுத்து குடும்பத்தை தாங்கிச் செல்ல முயல்கிறார். தந்தை வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிப் பதும் தங்கை காலில் ஷு போடவில்லை என்பதால் பள்ளியிலிருந்து அனுப்பும் அவலமும் மனதை கனக்கச் செய்கிறது.
நிகாரிகா, சசி அபர்ணா நடிப்பு நிறைவு. கிராமத்து பின்னணி யில் கதை சொல்லப்படுவ தால் காட்சிகளில் அழுத்தம் அதிகம் காணப்படுகிறது.
சர்வதேச நாடுகளில் திரைப் பட விழாக்களில் கலந்துக் கொண்டு படம் விருது பெறுகிறது என்பது சாதாரண விஷயமல்ல. தகுதியான படத்துக்குதான் விருது கிடைக்கும். அந்த வகையில் கோட்டா 42  சர்வதேச விருது களை வென்றுள்ளது.
இயக்குனர் அமுதவாணன் மனதில் புதைந்திருக்கும் ஏழ்மையின் கொடுமை திரைப் படமாக வெளிப்பட்டி ருக்கிறது. இசையும் கதை யோடு பின்னி . பிணைந்திருக் கிறது ஒளிப்பதிவு காட்சிகளை கண்ணுக்குள் பதிய வைக்கி றது.
கோட்டா – நிஜத்தின் பதிவு.

Leave A Reply

Your email address will not be published.