சன் டிவியில் நேரடியாக வரும் வெள்ளை யானை

8

நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் சமுத்திரக்கனி & யோகிபாபு நடிக்கும் ‘வெள்ளையானை’

இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி , யோகி பாபு . ஆத்மியா நடிப்பில் உருவாகியுள்ள படம் “வெள்ளையானை”.

இந்த வெள்ளையானை திரைப்படத்தை “மினி ஸ்டுடியோஸ் ” தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ் .வினோத் குமார் தயாரித்துள்ளார் . இந்த படத்தில் சமுத்திரக் கனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா நடித்துள்ளார் .சந்தோஷ் நாராயணன் இசையமைத் துள்ளார் .

முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப் படமான இந்த படத்தில் யோகிபாபு , E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்ல துரை ,’சாலை ஓரம் ‘ ராஜு , சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் .

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உரினங்களும் உணவை சார்ந்து இருக் கிறது . உணவு விவசாயத் தையும் , விவசாயியையும் சார்ந்து இருக்கிறது . விவாசாயம் நீரை சார்ந் துள்ளது .விவசாய வாழ்வின் அன்பையும் , வியர்வையையும் ஏமாற்றத்தையும் , கண்ணீ ரையும் , கோபத்தையும் நையாண்டித்தனமாகவும் , நகைச்சுவையாகவும் இயக்கியுள்ளார் இயக் குனர் சுப்ரமணியம் சிவா.

படத்தொகுப்பு  AL ரமேஷ் , கலை இயக்கம் ஜெகதீசன்.  ஒளிப்பதிவு வேல்ராஜிடம் உதவியா ளராக இருந்த விஷ்ணு ரங்கசாமி. சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயனின் தம்பி தினேஷ் சுப்பராயன். ஆடை வடிவமைப்பு நாகு.
மேக்கப் A .சரவணகுமார் , B. ராஜா.
விளம்பர வடிவமைப்புகள்  சசி & சசி.
மக்கள் தொடர்பு ரியாஸ் கே அஹ்மது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு நேரடி யாக சன் டிவியில் ஒளிபரப்பாகிறது .

 

Leave A Reply

Your email address will not be published.