சினிமா உருவாக்கும் படைப்பாளிகள் உஷாராகி வருகின்றனர் – ரகுல் ப்ரீத் சிங்

10

ரகுல் பிரீத் சிங் கூறியதாவது ‘ஓடிடியில் நல்ல கதையம்சம் உள்ள தரமானவை தொடர்கள் வர ஆரம்பித்துள்ளன. இதை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. வெறும் 4 பாடல், 4 சண்டை காட்சி, சில காமெடி காட்சிகளை வைத்து படத்தை எடுத்துவிட முடியாது என்பதை பலரும் உணர்ந்துள்ளனர்.  பார்வையாளர்களின் ரசனை மேம்பட்டு வருவதையே இது காட்டுகிறது. இதனால் சினிமா உருவாக்கும் படைப்பாளிகள் உஷாராகி வருகின்றனர். ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு இணையாக நல்ல தரமான படங்களை தர வேண்டும் என இயக்குனர்கள் எண்ணுகிறார்கள். ஓடிடியால் சினிமா வளரும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.