சினிமா- டிவி படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி

2 மாதங்களுக்கு பிறகு ஜூன் 21ம் தேதி முதல் தொடக்கம்

2
கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து  தற்போது அதன் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து  ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்தன. தற்போது அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
வருகிற ஜூன் 21ந் தேதி முதல், அதிகபட்சம் 100 பேருடன் படப்பிடிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும், கொரொனா வழிகட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்  என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது,

Leave A Reply

Your email address will not be published.