சிவாஜிக்கு வசனம் எழுதி புகழ் பெற்ற பாலமுருகன்

24

வசனங்களின் மூலம் வெற்றிப்படங்களை கொடுத்து நீங்கா புகழ் பெற்றவர்கள் சிலரே.. அவர்களில் இளங்கோவன், பேரறிஞர் அண்ணா, ஏ.எஸ்.ஏ. சாமி.. கலைஞர் கருணாநிதி, ஏ.பி. நாகராஜன், ஜாவர் சீதாராமன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அந்தக் காலக்கட்டங்களில் வசனங்களுக்காகவே தமிழ்ப் படங்கள் பேசப்பட்டன. ஏன் ‘பராசக்தி’ படத்தில் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான வசனங்கள் இன்றளவிலும் பேசப்படுகின்றன. அவ்வாறு வசனத்தின் மூலம் தனி இடம் பதித்தவர்களின் வரிசையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த கதாசிரியர் பாலமுருகனும் ஒருவர்.

நடிகர் திலகம் சிவாஜியின் மீது அதீத பற்று கொண்டவர் பால முருகன்.இவர் எழுதிய நாடகங்களில் சிவாஜி நடித்திருக்கிறார். ஆனாலும் சிவாஜியின் படங்களுக்கு வசனம் எழுத வேண்டும் என்பது அவருக்கு தீராத ஆசையாக இருந்துள்ளது. அந்த ஆசை 1965 ஆம் ஆண்டு வெளியான ‘அன்புக்கரங்கள்’ திரைப்படம் மூலம் நிறைவேறியது. அண்ணன் தங்கைக்கு இடையேயான பாசத்தை விளக்கும் இந்த திரைப்படத்தில் தனது அழுத்தமான வசனங்கள் மூலம் தனி முத்திரை பதித்திருப்பார்.சிவாஜியின் ’பட்டிக்காடா பட்டணமா’, ‘ராஜபார்ட் ரங்கதுரை’, வசந்த மாளிகை’ என சிவாஜியின் பல படங்களுக்கு பாலமுருகன் வசனம் எழுதியிருக்கிறார்.மேலும் தனது 40 ஆண்டுகால சினிமா பயணத்தை, ”நான் கண்ட சிவாஜியும் சினிமாவும்” என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.