தமிழக முதல்வரிடம் நடிகர் விவேக் மனைவி கோரிக்கை!

0

றைந்த நடிகர் விவேக்கின் மனைவி தமிழக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். நகைச்சுவையுடன் முற்போக்கான கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் சென்றவர் விவேக். மேலும் அவர் இயற்கை மீது பேரன்பு கொண்டவர். தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்ததோடு,  இளைஞர்கள் அதிகளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தி வந்தார்.  மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்.

VIVEK

கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி விவேக் திடீரென  மாரடைப்பால் காலமானார். விவேக்கின் மறைவு தமிழக மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. சமீபத்தில் தான் அவரது ஒரு வருட நினைவஞ்சலி சமீபத்தில் தான்  அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, மகள் அமிர்தா நந்தினியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.  விருகம்பாக்கத்தில் நடிகர் விவேக் அவர்கள் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது  பெயரை சூட்ட வேண்டும் என்ற அவர் ,முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது  விவேக் பசுமை இயக்கத்தின் நிர்வாகிகள் முருகன், லாரன்ஸ், அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.