தமிழ் டி வி சீரியல் நடிகை சித்ரா தற்கொலை..

18
டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர்  சித்ரா. பின்னர் டிவி சீரியல்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருகிறார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து  போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சித்ராவின் தற்கொலை டிவி நட்சத்திரங்களிடையேயும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியும் சோகமும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் சித்ரா. ஜெயா டிவி, ஜீ தமிழ், உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். ‘சரவணன் மீனாட்சி (சீசன் 2)’ தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற பாத்திரத்தில் நடித்து வந்தார்.

Leave A Reply

Your email address will not be published.