தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் கிரைம் திரில்லரான ‘சிட்தி’ !

0

சூர்யா பிலிம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மகேஷ்வரன் நந்தகோபால் தயாரித்துள்ள படம் ‘சிட்தி’(SIDDY).. இந்தப் படத்தில் அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.

முக்கிய வேடத்தில் I.M.விஜயன், மற்றும் ராஜேஷ் சர்மா, ஹரி கிருஷ்ணன், சிஜீ லால், வேணு மரியாபுரம், சொப்னா பிள்ளை, மதுவிருத்தி, திவ்யா கோபிநாத், தனுஜா கார்த்தி ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு – கார்த்திக் S.நாயர், இசை – ரமேஷ் நாராயணன், வசனம் – சீனிவாச மூர்த்தி, பாடல்கள் – சினேகன், மலர்வண்ணன், படத் தொகுப்பு – அஜித் உன்னி கிருஷ்ணன், நடன இயக்கம் – சாமி பிள்ளை, சண்டை இயக்கம் – பவன் சங்கர், கலை இயக்கம் – பெனித் பத்தேரி, மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – மகேஷ்வரன் நந்தகோபால், தயாரிப்பு நிறுவனம் – சூர்யா பிலிம் புரொடக்ஷன்ஸ், எழுத்து – இயக்கம் – பயஸ் ராஜ்.

படம் குறித்து இயக்குநர் பயஸ் ராஜ் பேசும்போது, “இந்தப் படம் சற்றே வித்தியசமான கிரைம் திரில்லர் ஜானர். வயலன்ஸ் இல்லாத பாப்கார்ன் திரில்லரும்கூட..!

சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவனான ‘சிட்தி’ தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார்..? இறுதியில் என்ன நடந்தது..? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளோம்.

இன்றைய சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை வைத்துதான் இந்த ‘சிட்தி’ படத்தினை உருவாக்கியிருக்கிறோம். படம் பார்த்த பிறகு ‘சிட்தி’ போன்ற ஒரு ஆள் நிச்சயம் நம் சமூகத்திற்கு தேவை என்று அனைவரும் சொல்வார்கள்.

I.M. விஜயன் கூலான போலீஸ் ஆபீஸராக கலக்கியிருக்கிறார். ஹிந்துஸ்தானி
இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணன் இதுவரை தராத இசையை இந்த படத்திற்கு கொடுத்திருக்கிறார். பாடல்களையும் பின்னணி இசையையும் கேட்டவர்கள் இது அவரது இசைதான் என்பதை நம்பவில்லை. அப்படி ஒரு வித்தியாசமான இசையை தந்துள்ளார். அது இந்த படத்திற்கு மிகப் பெரிய பலம். மிக அற்புதமான பாடல் வரிகளை சினேகன் இந்த படத்திற்குக் கொடுத்திருக்கிறார்..” என்றார்.

இதன் படப்பிடிப்பு முழுவதும் கேரளாவின் எழில் மிகுந்த எர்ணாகுளம், கொச்சி, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் 35 நாட்கள் இரவு பகலாக ஒரே கட்டமாக நடைபெற்றது.

சிறந்த நடிகர்கள், சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் கூட்டணியில் சிறப்பாக உருவாகியிருக்கும் இந்த ‘சிட்தி’ திரைப்படம் விரைவில் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.