தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதி: முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து

0

கொரோனா ஊரடங்குகளை தளர்த்தி வரும் 16ம் தேதி முதல் தியேட்டர்களில் 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலிணுக்கு தமிழ் திரைபப்பட சங்கம் நன்றி தெரிவித்திருக்கிறது. சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு”

தமிழக முதல்வருக்கு நன்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் என். இராமசாமியும் மற்ற நிர்வாகிகளும் இணைந்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதில், ” தமிழக முதல்வராக பதவி ஏற்று ஓராண்டு கூட ஆகாத நிலையில் கொரோனா என்னும் நோயை கட்டுப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவந்து மக்களை காப்பாற்றியதில் இந்தியாவிலேயே நமது முதல்வர் தான் முதன்மையில் உள்ளார்.

மக்களின் வாழ்வாதாரம் பெருகிட தொழில்துறையில் கட்டுப்பாடுகளை சிறிதுசிறிதாக தளர்த்தி இன்று முழுவதுமாக தளர்த்தி மக்களின் நம்பிக்கையை பெற்ற முதல்வர்களிலும் நமது முதல்வர் தான் முதலாவதாக உள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் திரைத்துறை சம்பந்தமான பல் வேறு கோரிக்கைகள் தமிழக முதல்வரிடம் வைத்தோம். அவற்றை தாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர் அவர்கள் திரையரங்குகளில் 50 சதவிகித மக்களை படம் பார்க்க அனுமதித்த முதல்வர் இன்று நூறு சதவிகிதம் திரையரங்குகளில் மக்கள் படம் பார்க்க அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.

தொழில்துறை சிறந்து விளங்க பல்வேறு சலுகைகளை வழங்கிவரும் முதல்வர் அவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வைத்துள்ள கோரிக்கைகளை ஒவ்வொன்றாக திரை உலகினருக்கு நிறைவேற்றி வருகிறார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் ,
தமிழ் திரைஉலகம் சார்பிலும், கோடானுகோடி நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.