திரைப்படத்தின் ‘டைட்டில்’ சென்சார் போர்டு உத்தரவு

8

திரைப்படங்கள் எந்த மொழியில் எடுக்கப்படுகிறதோ, அதே மொழியில் அந்தப் படத்தின் தலைப்பு, நடிகர்கள் பெயர்கள் அடங்கிய, ‘டைட்டில் கார்டு’ இருக்க வேண்டும் என, மத்திய திரைப்பட தணிக்கை வாரியமான, சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது.

மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பல மொழிகளில் தயாராகும் திரைப்படங்களின் தலைப்பு, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர் பட்டியல், ஆங்கிலத்தில் இடம்பெறுகின்றன.

இனி, எந்த மொழியில் படம் எடுக்கப்படுகிறதோ, அந்த மொழியிலேயே, இந்தப் பட்டியல் இடம்பெற வேண்டும். திரைப்பட தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் விரும்பினால், மற்றொரு மொழியிலும் அந்த பட்டியல் இருக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.