தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நழுவ விடுகிறதா தமிழக அரசு?

மக்கள் நீதி மய்யம் கேள்வி

0

*ரூ. 1,200 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நழுவ விடுகிறதா தமிழக அரசு?என மக்கல் நீதி ம்ய்யம் துனை தலைவர் ஆர்.தங்கவேல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

சென்னை – பெங்களூரு இடையேயான சாலை போக்குவரத்து மேம்பாட் டிற்காக புதிதாக விரைவுச் சாலை அமைக்கப்படும் என்று 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் பெரும்புதூர் – சுங்கச்சாவடி முதல், வாலாஜாபேட்டை வரை உள்ள ‘நான்கு’ வழிப்பாதையை, ‘ஆறு’ வழிப்பாதையாக மாற்ற ரூ.1,188 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக மொத்தம் 2,600 ஹெக்டேர் நிலம் தேவை எனவும், அதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 1,000 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை விரிவாக்கத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகிறது. இதன் காரண மாக பணிகள் தாமதமா கின்றன.

மேலும், ஆக்கிரமிப்புகள் அகற்றம், நிலம் கையகப் படுத்தும் பணிகள் ஆகியவை திட்டமிட்ட காலத்திற்குள் நடைபெறா ததால் பணிகளை முடிப் பதற்கு தடையாக இருப்பதாக கருதி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழகத்தில்
4 நெடுஞ்சாலை பணி களை கைவிட திட்டமிட்டி ருப்பதாக வெளியாகி யுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு-கேரள எல்லையில் இருந்து கன்னியாகுமரி வரை யிலான 2,
நான்கு வழிப்பாதைத் திட்டங்களும், பெரும் புதூரில் இருந்து வாலாஜா பேட்டை வரையிலான 2, ஆறு வழிப்பாதைத் திட்டங்களும் முடங்கிக் கிடப்பதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பின் மையும் காரணமாகச் சொல்லப்படுகிறது.

திட்டப் பணிகளைச் செயல்படுத்த தேவையான நிலம் கிடைக்கவில்லை, குவாரிகள் மூடப்பட்டது, தமிழ்நாடு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத் திடமிருந்து அனுமதி கிடைக்காதது போன்ற பல காரணங்களால் பணி களை ரத்து செய்து, ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது என்ற முடிவு மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதில் ஒருசில திட்டங்கள் 2016-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இருப் பினும் இதுவரை நிலம், மண் மற்றும் பிற அனுமதிகள் ஏதும் முறை யாக கிடைக்கவில்லை என நெடுஞ்சாலை ஆணையம் தெரிவிக் கிறது.

இப்பிரச்சினை குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் 25 மாவட்ட ஆட்சியர்களுடன் ஜூலை மாதம் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலை பணிகளுக் கான சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவை எடுப்பதே முறையானது. தமிழ்நாடு அரசு மாநிலத்தின் வளர்ச்சியை முதன்மையான நோக்கமாக கொண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கி சாலை விரிவாக்கத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேன்டும்.

இவ்வாறு ஆர்.தங்கவேலு கூறியுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.