நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, வரும் 20 ஆம் தேதி நடக்க இருக்கிறது!.

1

கடந்த 2019 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்தது. இதில் நடிகர் நாசர் தலைமையில் ஓர் அணியும் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும் போட்டியிட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில், அந்தத் தேர்தல் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கில் தனி நீதிபதி கல்யாண சுந்தரம் தேர்தல் செல்லாது என அறிவித்தார். அதை எதிர்த்து நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் என்றும் மறுதேர்வு நடத்தத் தேவையில்லை என்றும் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதோடு எண்ணப்படாத வாக்குகளை எண்ணவும் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, அந்த வாக்குகளின் எண்ணிக்கை வரும் 20 ஆம் தேதி, கல்லூரி சாலையில் உள்ள குட்ஷெப்பேர்ட் கான்வென்டில் நடைபெற இருக்கிறது. போட்டியிட்ட வேட்பாளர் அல்லது அவர்களது முகவர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.