நடிகை ஆண்ட்ரியாஆக்சன் நாயகியாக அவதாரமெடுத்திருக்கும் “கா”! ..

0

‘மைனா’, ‘சாட்டை’ போன்ற தரமான, சமூக அக்கறையுள்ள, மிக உன்னதமான திரைப் படங்களை எடுத்த ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஜான் மேக்ஸ் தயாரித்துள்ள ஆறாவது படம் ‘கா’. இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சலீம் கவுஸ், சின்னத்திரை புகழ் கமலேஷ், ‘காற்றுக்கென்ன வேலி’ புகழ் அக்ஷிதா, ‘சூப்பர் டீலக்ஸ்’ பட புகழ் நவீன், ‘கும்கி’ பட புகழ் ‘மூணார்’ சுப்பிரமணியன் ஆகியோருடன் அர்ஜுன் சிங் என்கிற புதுமுக நடிகரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் நாஞ்சில். சுந்தர் சி.பாபு இசையமைக்க, அறிவழகன் ஒளிப்பதிவு செய்ய, எலிசா படத் தொகுப்பை செய்துள்ளார். மேலும் சேது அவர்களின் சிறப்பு சப்தமும், தரணியின் மிரட்டலான ஒலி கலவையும் இப்படத்தின் சிறப்பம்சமாக பேசப்படும்.  மக்கள் தொடர்பு – மணவை புவன்.

முழுக்க, முழுக்க காட்டின் பின்னணியில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் பார்ப்பவர்களுக்கு அடர்ந்த காட்டுக்குள் சென்று வந்த திகில் அனுபவத்தை இத்திரைப்படம் நிச்சயமாக கொடுக்கும்.

இந்தப் படத்தில் ஆண்ட்ரியா பறவைகள், விலங்குகளை புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். மேலும் படத்தில் சில சண்டை காட்சிகளிலும் ஆண்ட்ரியா நடித்துள்ளார். மிரட்டலான வில்லனாக சலீம் கவுஸ் வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.