போராளி வேடத்தில் சாய் பல்லவி

10

மலையாளத்தில் பிரேமம் படத்தில் அறிமுகமான சாய்பல்லவிக்கு இதர மொழி படங்களிலும் வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் தியா, மாரி-2, என்.ஜி.கே, படங்களில் வந்தார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.

மலையாளத்தில் பிருதிவிராஜ், பிஜுமேனன் நடித்து வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் பிஜுமேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், பிருதிவிராஜ் வேடத்தில் ராணா நடிக்கின்றனர். சாகர் கே.சந்திரா இயக்குகிறார்.

இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். இதில் பவன் கல்யாண் மனைவியாக நடிக்கும் போராளி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவியை ஒப்பந்தம் செய்து இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க சாய்பல்லவி ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவியது. அதே சம்பளத்தை கொடுத்து சாய்பல்லவியை ஒப்பந்தம் செய்தார்களா அல்லது சம்பளம் குறைக்கப்பட்டதா என்பதை படக்குழுவினர் தெரிவிக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.