மதுரையில் தேர்தல் பிரசாரம் தொடங்கிய கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

16

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் 2021ம் ஆண்டு தமிழக் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் இன்று தொடங்கினார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை  சென்றசடைந்தார் கமல் ஹாசன், அவருக்கு ரசிகர்களும் கட்சியினரும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இன்று 4 இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். நாளை காலை மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் திறந்த வேனில் கமல்ஹாசன் பிரசாரம் செய்துவிட்டு  திண்டுக்கல், தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல இடங்களுக்கு திறந்த வேனில் செல்கிறார்.

வழியில் பல  இடங்களில் தெருமுனைக் கூட்டங்களில் மக்கள் மத்தியில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

15-ம் தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும், 16-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும் கமல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.