மன்சூர் அலிகான பாடி நடித்த டிப் டாப் தமிழா ஆல்பம் வெளியானது..

11

அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கை நக்கலும் நையாண்டியுமாக விமர்சித்து தெறிக்க விடுபவர் மன்சூர் அலிகான். படு துணிச்சலாக அவர் முன் வைக்கும் விமர்சனங்கள் யூ டியூபில் வீடியோவாக வெளிவந்து சமூகவலைதளங்களில் பரபரப்பைக் கிளப்புவது வழக்கம்.

அந்த வகையில் மன்சூர் அலிகானின் அடுத்த அதிரடி ‘டிப் டாப் தமிழா’ என்ற பாடல் வீடியோ.

‘ஆன்லைன்லயே கிளாஸ் எடுக்குறாங்க
ஆன்லைன்லேயே நாட்டை ஆளுறாங்க
ஆன்லைன்லேயே சாப்பாடு ஆர்டர் பண்றாங்க ஆன்லைன்ல ஏர் புடிச்சு மாடுகட்டி
விவசாயம் பண்ண முடியாது’ என்று சமூக அவலத்தை போட்டுத் தாக்கும் வரிகளில் அமைந்த அந்த பாடலை எழுதி, இசையமைத்து, இயக்கி நடித்திருக்கிறார் மன்சூர் அலிகான்.

அந்த பாடல் வீடியோவானது மன்சூர் அலிகானின் ‘Tip Top Tamila’ யூ டியூப் சேனலில் இன்று (9.1.2021) மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.