டி.ஆர் ராமச்சந்திரன் மறைந்த நாளின்று

2

 

டி.ஆர். ராமச்சந்திரன். இவர் ஹீரோவாக நடிச்ச ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில், அன்று முன்னணி நாயகனாக வளர்ந்துவிட்ட சிவாஜி கணேசன் இரண்டாவது ஹீரோவாக நடித்தார் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள்.
அதில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால் ராமச்சந்திரனுக்கு ஜோடி ராகினி.

நகைச்சுவை நாயகனாக அடைந்த வெற்றியால், ராகினி மட்டுமல்ல, வைஜெயந்திமாலா, அஞ்சலிதேவி, சாவித்ரி, ரஞ்சனி எனப் பல முன்னணிக் கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடிக்கத் தயங்கலை.

டி.ஆர். ராமச்சந்திரன் நாடகம் வழியாக சினிமாவுக்கு வந்தவர். 25 படங்களில் கதாநாய கனாக நடித்த இவர், அதன் பிறகு நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத் திரங்களில் சுமார் 30 ஆண்டு காலம் நிலையான செல்வாக்குடன் சாதனை படைத்தவர்.
40களில் செல்வச் செழிப்புடன் வளர்ந்த மேட்டுக்குடி இளைஞர் களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங் களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம் ஆகியவற்றின் கலவை யுடன் குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கமும் கொஞ்சம் அம்மாஞ்சித்தனமும் கலந்த காதல் உணர்ச்சி, இவற்றுடன் தனது அபாரமான உடல்மொழி யால் ரசிகர்களை வயிறுகுலுங்கச் சிரிக்கவைத்த நகைச் சுவைக்கு டி. ஆர். ராமச்சந்திரன் சிறந்த உதாரணம்.

அப்பவோ அல்லது இப்பவோ கதாநாயகிகள் தங்களது கண்களை நடிக்கப் பயன்படுத்து கிறார்களோ இல்லையோ, இவர் தனது உருண்டை யான கண்களைப் பயன்படுத்தினார். இவர் உருட்டி விழிப்பதைப் பார்த்ததுமே ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். அவர் ஏற்றுக்கொண்ட பெரும் பாலான பாத்திரங்கள் மேட்டுக்குடி வாழ்வை நகைச்சுவையாக்கின.

50க்கும் அதிகமான படங்களில் தனக்கான பாடல்களைப் பாடி நடித்த இவர், ரசனையுடன் பல படங்களைத் தயாரித்தும் நடித்திருக்கிறார். திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின் அமெரிக்காவில் தன் மகள்களுடன் வசித்து வந்தார்.

கடந்த 1990-ம் ஆண்டு, இதய அறுவை சிகிச்சையின்போது காலமானர். அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும் வித்தியா சமான உடல் மொழி யையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.

Leave A Reply

Your email address will not be published.