விஜய் நடிப்பில் தயாரான ‘பீஸ்ட்’ படத்தின் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியானது!.

1

ளைய தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய்யின் ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் சார்பில் பிரம்மாண்ட தயாரிக்கப் பட்டுள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த படத்தை வெளியிட குறுகிய காலமே உள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே அனிரூத் இசையில் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ வெளியான நிலையில் இரண்டாவது பாடலான ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியாகியுள்ளது. விஜய் தனது சொந்த குரலில் பாடியுள்ளதால் ரசிகர்கள் உற்சாக மடைந்துள்ளனர். தற்போது இந்த பாடல் சமூக வேகமாக வைலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.