வேட்டை நாய் (பட விமர்சனம்)

299

படம்: வேட்டை நாய்
நடிப்பு: ஆர்,கே,சுரேஷ், ராம்கி, சுபிக்‌ஷா, நமோ நாராயணா, ரமா, கவுதம், விஜய் கார்த்திக், விஜித் சரவணன், ஜோதி முருகன்
இசை: கணேஷ் சந்திரசேகரன்
ஒளிப்பதிவு: முனிஸ் ஈஸ்வரன்

தயாரிப்பு; பி.ஜோதிமுருகன், விஜய் கார்த்திக்,
இயக்கம்: எஸ்.ஜெய்சங்கர்

கட்டபஞ்சாயத்து செய்யும் ராம்கியிடம் அடியாளாக இருக்கிறார் ஆர்.கே. சுரேஷ். யாரை ராம்கி கைநீட்டுகிறாரோ அவரை அடித்து தள்ளுகிறார். இதற்கிடையில் சுரேஷுக்கு கல்யாண ஆசை வந்துவிட அவரை அழைத்துக்கொண்டு வெளியூருக்கு சென்று பெண் கேட்கிறார் அத்தை ரமா. ஆனால் சுபிக்‌ஷாவை முதன்முறைக்க பார்க்கும்போதே அவர் மீது காதல் கொள்ளும் சுரேஷ் கொஞ்ச நேரம் காதல் சிலுமிசங்கள் செய்கிறார்.   சுபிக்‌ஷாவை திருமணம் செய்த கொண்ட பிறகு சுரேஷின் வாழ்க்கை துவண்டு விடுகிறது.  ஆடியாள் வேலை செய்வதை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்ல ,முயல்கிறார்  சுரேஷுக்கு  யாரும் வேலை தர மறுக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் சுபிஷ்காவை ஒரு தலையாய் காதலித்த  டீச்சரின் மகன், சுரேஷைது ஒன்றிலிருந்து காப்பாறுகிறார். இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். சுரேஷுக்கு தனது கம்பெனியில் வேலை தருகிறார்.  இதற்கிடையில் சுரேஷ் மனைவி சுபிக்‌ஷாவையும், டீச்சரின் மகனையும் இணைத்து ஊர் பேசுகிறது. இதில் மனைவி மீது கோபம் அடைகிறார் சுரேஷ் அடுத்து நடந்தது என்ன என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

ஆர்.கே.சுரேஷுக்கு நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு தரும் படமாக வேட்டை நாய் அமைந்திருக்கிறது. பல படங்களில் முரட்டுதனமாகவே பார்த்த சுரேஷை இப்படத்தில் குடும்ப பொறுப்பு, மனைவிக்கு மரியாதை தரும் கணவர் என வித்தியாசமான கோணங்களில் ரசிக்க முடிகிறது.

ராம்கியின் அடியாளாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அடிதடியில் ஈடுபடும் ஆர்.கே சுரேஷ் அவரை விட்டு பிரியமுடியாமல் தவிப்பதும் ஒரு கட்டத்தில் மனைவி சுபிக்ஷாவின் ஆசைப்படி அடியாள் வேலையை விட்டு விட்டு.கம்பெனியில் வேலைக்கு சேர்வதுமாக பொறுப்புள்ளவராக மாறும்போது நல்லபிள்ளையாகிறார்.

ராம்கி பல வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் ரீ என்ட்ரி ஆகி மனதில் பதிகிறார். இன்னும் இளமையை தக்கவைத்துக்கொண்டிருப்பது அதிசயம்தான்.

மனைவி கரு கலைக்கச் செல்கிறார் என்பதறிந்து அதிர்ச்சி அடையும் சுரேஷ் அவரிடம் கரு கலைக்க வேண்டாம் என்று கெஞ்சும்போது உருகவைக்கிறார். பாடல் காட்சியில் நடன அசைவுகளையும் அழகாக ஆடி அட போடவைக்கிறார். சுரேஷின் நண்பராக இருந்தாலும் அவரிடம் மறைமுகமாக மோதல் நடத்துகிறார் ஜோதி முருகன். ரமா, ஹீரொயின் சுபிக்‌ஷா சக பாத்திரங்கள் அனைவரும் பொறுப்பாக நடித்துள்ளனர்

முனிஸ் ஈஸ்வரன் கேமரா கையாண்டிருக்கிறார். கணேஷ் சந்திரசேகரன் இசை மெருகு.

வேட்டை நாய்- அடியாள் குடும்பஸ்தனாகும் கதை.

 

 

Leave A Reply

Your email address will not be published.