சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட் அனுமதி முதல்வருக்கு குஷ்பு கோரிக்கை

மாயாத்திரை ஆடியோ விழாவில் பேச்சு

17

2021ம் ஆண்டின் முதல் திரைப்பட விழாவாக இன்று காலை ’மாயத்திரை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. அசோக் ஹீரோவாக நடிக்க சாந்தினி, ஷீலா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இப்படத்தை  வி.சாய்பாபு தயாரிக்கிறார். டி.சம்பத்குமார் இயக்குகிறார், இளையராஜா வேலு சாமி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.என்.அருணகிரி இசை அமைக்கிறார். 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ் ணன், துணை தலைவர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடிகை குஷ்பு ஆடியோவை வெளியிட நடிகை சுஹாசினி பெற்றுக் கொண்டார்.

பிறகு குஷ்பு பேசியதாவது:

நான் தெலுங்கு படத்தில்தான் முதலில் அறிமுகமானேன். அப்போது முதல் எனக்கு இப்படத்தின் தயாரிப்பாளர் சாய்பாபுவை தெரியும். இவர்தான் எனனுடைய எல்லா படங்களுக்கும் எனது காஷ்டியூமராக இருந்தவர். என்னை ஒப்பந்தம் செய்ய வந்தால் முதல் கண்டிஷனாக இவரை காஸ்டியூமராக போட வேண்டும் என்பேன். அவருக்குதான் எனக்கு எந்தவிதமான உடை நன்றாக இருக்கும். எந்த வகை துணி அணிவேன் என்பது தெரியும். அவரால் நானும் காஸ்டியும் டிசைன் பற்றி தெரிந்துக்கொண்டேன். இப்படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்து அவர் தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும்.
திரையுலகுக்கு நான் வந்து 33 வருடங்கள் ஆகிவிட்டது. எங்களை இயக்குனர்கள் படங்களில் அறிமுகப்படுத்தும்போது கொண்டாட்டமாக அறிமுகப்படுத்துவார்கள். எங்களுடன் நடித்த நடிகர்கள், பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் அவ்வளவு கண்ணியமானவர் களாக இருந்தனர். நடிகைகளுக்கு கண்ணியம் குறையா மல் பாதுகாப்பு அரணாக திகழ்ந்தார்கள். அப்படிப்பட்ட வர்களில் ஒருவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர் சாய் பாபு.

சினிமாவில் உள்ள எங்களை போன்றவர்களுக்கு அதில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவிலேயேதான் முதலீடு செய்யத் தெரியும். வேறு தொழில் செய்யத் தெரியாது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக முரளி ராமசாமி தேர்வாகி இருக்கிறார். சிறிய படங்கள், மீடியம் பட்ஜெட் படங்கள் பெரிய படங்கள் என மூன்று பிரிவிகளில் படங்கள் தயாராகிறது. சிறிய படங் களுக்கு சங்க தலைவர் என்ற முறையில் பல உதவிகளை செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இன்னொரு கோரிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வைத்துக் கொள்கிறேன். திரையுலகிற்கு 100 சதவீத டிக்கெட் அனுமதிக்க அரசு அனுமதி தர வேண்டும்.
இவ்வாறு குஷ்பு பேசினார்.
விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.முரளி ராமசாமி, செயலாளர் ராதா கிருஷ்ணன், துணை தலைவர் கதிரேசன் ஆகியோர் பேசும் போது.’இந்த புத்தாண்டு முதல் தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டாக அமைய வேண்டும். சிறுபட தயாரிப்பா ளர்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அவ்வள வையும் எங்கள் நிர்வாகம் செய்யும். விபிஎஃப் என்ற கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்திருக்கிறோம். அதற்கு பதிலாக சிறிய கட்டணமே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது; என்றனர்.

விழாவில் பட ஹீரோ அசோக்கிற்கு சிங்கப்பூர் அமைப்பு சார்பில் வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தை நடிகைகள் ,குஷ், சுஹாசினி இணைந்து அவருக்கு வழங்கினார்கள்.
முடிவில் மாயத்திரை பட  தயாரிப்பாளர் வி.சாய்பாபு,  நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பி ஆர். ஓ ரியாஸ் அஹமத் செய்திருந்தார். பாரஸ் ரியாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.