சினிமா டிக்கெட் 100 சதவீதம் அனுமதி பரிசீலனை; அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைக்க வேண்டும்..

12

 

கொரோனா வைரஸ் பரவல் தொற்றை தடுக்க கடந்த மார்ச் மாதம்  அரசு ஊரடங்கு பிறப்பித்தது. இதையடுத்து சினிமா பணிகள் அனைத்தும் முடங்கின தியேட்டர்கள் மூடப்பட்டன. 5 மாதத்துக்கு பிறகு சினிமா படப்பிடிப்புகள் நடத்த கொரோனா விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அடுத்து கடந்த நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. 50 சதவீத டிக்கெட் அனுமதி  மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் 100 சதவீத டிக்கெட் அனுமதி கிடைத்தால் மட்டுமே விஜய் நடித்துள்ள மாஸ்டர். தனுஷின் ஜெகமே தந்திரம் போன்ற படங்கள் ரிலீஸ் செய்ய எண்ணி உள்ளனர்.

100 சதவீத டிக்கெட் அனுமதி தரப்படுமா என்பதற்கு தமிழக செய்தி துறை அமைச்சர்  கமபூர் ராஜூ பதில் அளித்தார். அவர் கூறியது,:

தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்தால் தியேட்டரில் 100 சதவீத சீட் நிரப்ப பரிசீலனை செய்யப்படும்.

தமிழக அரசால் அங்கீகாரம் பெற்றது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். அவர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.