சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட் அனுமதி: அரசு உத்தரவு

13ம் தேதி மாஸ்டர், 14ம் தேதி ஈஸ்வரன் பொங்கல் வெளியீடு

16

கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடிக்கிடந்தது. இதனால் புதிய படங்கள் வெளியிட முடியாமல் முடங் கியது. சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், மூக்குத்தி அம்மன் போன்ற பல படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.
தியேட்டர்கள் திறக்க தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் தியேட்டர்கள் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதியுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது.

பெரிய படங்களான மாஸ்டர் போன்றவை ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப் பட்டது சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆனது. தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த சில வாரங்களாகவே தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

நடிகர் விஜய் தமிழக முதல் வரை நேரில் சந்தித்து 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு கோரிக்கை வைத்தார். அதே போல் நடிகர் சிம்பு, நடிகை குஷ்பு போன்றவர்களும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்கி  இன்று அறிவித்துள்ளது. இது தியேட்டர் அதிபர்கள், ரசிகர் கள், நடிகர்கள் மற்றும் திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

விஜய் நடித்துள்ள மாஸ்டர்  ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது.  லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். நிதி அகர் வால் ஹீரோயினாக நடித் திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.