நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்களில் 100 சதவீதம் ரசிகர்கள் அனுமதி

முதல்வர் உத்தரவு

1

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் திரையரங்கு களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி அளித் துள்ளது.

கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த 2020ம் ஆண்டும் பல மாதங்கள் திரையரங்குகள் இயங்க அரசு அனுமதி மறுத்து இருந்தது.
பல்வேறு கோரிக்கை களுக்கு பிறகு கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த பிறகு தியேட்டர்கள் இயங்க கட்டுப்பாடு களுடன் அனுமதி வழங்கப்பட்டது.
மீண்டும் 2021ம் ஆண்டில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து தியேட்டர்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது சில மாதங்கள்.முற்றிலுமாக தியேட்டர்கள் முழுவதும் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து அரசிடம் தியேட்டர் அதிபர்கள் தியேட்டர்கள் இயக்க அனுமதி கோரி வந்தனர்.
கொரோனா பரவலை தீவிரமாக கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்தது. அதற்கு பலன் கிடைத்தது. இதையடுத்து சமீபத்தில் தியேட்டர்கள் 50சதவீத பார்வையா ளர்கள் அனுமதித்து கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்ற உத்தரவிட்டது .
விரைவில் தீபாவளி வரும் நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையா ளர்கள் அனுமதி வழங்க கோரப்பட்டு வந்து. அதனை ஏற்று வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து கூடுதல் தளர்வுகளை  அறிவித்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட் டுள்ளார். அதன் விவரம் வருமாறு

* தமிழகத்தில் தளர்வுக ளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு

*அனைத்து வகை கடைகள், மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கம்.

* நவம்பர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர் களுக்கு அனுமதி

* தமிழகத்தில் தனித்து இயங்கும் அனைத்து வகை மதுக்கூடங்களுக்கும்(பார்க
ள்) அனுமதி

* அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8-வது வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதி அளிக்கப்படும்

* கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனுமதி

*விளையாட்டு அரங்குகளில் பயிற்சி, விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதி

*சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் இன்று முதல் அனுமதி.

இவ்வாறு முதல்வர் அறிவித்திருக்கிறார்

 

Leave A Reply

Your email address will not be published.