மம்முட்டி, மோகன்லாலுடன் 140 கலைஞர்கள் பங்கேற்ப்பு

9

மலையாள கலைஞர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டுவதற்காக மம்முட்டியும், மோகன்லாலும் புதிய மலையாள படமொன்றில் இணைந்து நடிக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கினால் நாடு முழுவதும் திரையரங்குகள் பல மாதங்களாக மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் திரையுலகுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. சாதாரண நடிகர்-நடிகைகளும், திரைப்பட தொழிலாளர்களும் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டனர்.

இதுகுறித்து அம்மா நடிகர் சங்கம் தலைவர் மோகன்லால் கூறும்போது,

“கொரோனா ஊரடங்கினால் திரையுலக கலைஞர்கள் ஏராளமானோர் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் மலையாள நடிகர் சங்கம் சார்பில் புதிய படம் உருவாக உள்ளது.

பிரியதர்ஷன், ராஜீவ்குமார்

இந்த படத்தை பிரியதர்ஷன், ராஜீவ்குமார் ஆகியோர் இணைந்து இயக்க உள்ளனர். இதில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட 140 கலைஞர்கள் பணியாற்றுவார்கள்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.