புதிய படத்தில் மீண்டும் இணையும் விஷால்-ஆர்யா.. ஆனந்த் சங்கர் இயக்குகிறார்..

16

நடிகர்கள் விஷால், ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர் கள். இவர்கள் ஏற்கனவே பாலா இயக்கிய ’அவன் இவன்’ படத்தில் இணைந்து நடித்தனர். பின்னர், ’வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்ச வங்க’ படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க விஷால் கெஸ்ட் ரோலில் நடித்தார். கடந்த 2015ம் ஆண்டு இப் படம் திரைக்கு வந்தது. அதன் பிறகு இருவரும் சோலோ ஹீரோவாக நடித்து வந்தனர். 5 வருட இடைவெளிக்கு பிறகு விஷால், ஆர்யா இருவரும் புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.
மினி ஸ்டுடியோஸ் 9வது தயாரிப்பான தமிழில் அந்நிறு வனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்க உள்ளனர். இதற்கிடையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் படப்பிடிப் புடன் தொடங்கியது.
இப்படம் பல்வேறு மொழி களில் வெளியிட திட்டமிடப் பட்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.