நடிகை ஆண்ட்ரியா இசை அமைத்து எழுதி பாடிய பாடல்..

19

நடிகை ஆண்ட்ரியா திரைப்படங்களில் நடிப்பதுடன் தனி பாடல் ஆல்பங்களும் வெளியிட்டு வருகிறார். அவர் எழுதி இசை அமைத்து பாடி உள்ள பாடல் எழுந்துவா.

இந்தப் பாடல் குறித்து ‘எழுந்து வா’ பாடல் குழுவினரிடம் கேட்ட போது “சுதந்திரம் என்பது நமது மனதில் இருந்தே தொடங்கு கிறது, நீங்கள் பார்க்கும் 4 சுவர்களுக்கு வெளியே அல்ல. உங்கள் ஒற்றுமை கைகொடுப் பதால் மனிதன் உருவாக்கிய எல்லைகள் மங்குகின்றன. 

நீங்கள் சக்தி வாய்ந்தவர். உங்களால் ஒரு போரை நிறுத்த முடியும். நீங்கள் வாகை சூடலாம். நீங்கள் பறக்கலாம். நீங்கள் காரணமாக இருக்க லாம். நீங்கள் மாற்றமாக இருக்கலாம். எனவே, எழுங் கள். ஏனெனில் உங்கள் நேரம் வந்துவிட்டது. எழுங்கள்! ஏனெனில் உங்கள் குரல் கேட்க வேண்டும். எழுங்கள்! ஏனெனில் போதும் என்பது போதாது. எழுந்து வா” என்பது தான் இந்தப் பாடல் சொல்ல வரும் கருத்து’ என்றார் கள்.
கொரோனா அச்சுறுத்தலால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்தச் சமயத்தில் புத்துணர்ச்சி அளிக் கும் விதமாக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர். ஆண்ட்ரியா மற்றும் ஆர்யன் தினேஷ் தங்களுடைய குரல் களின் மூலம் இருவகை கொண்ட மக்களின் மனங் களை பிரதிபலிக்கும் நேரத் தில், இந்த வீடியோவில் பாடல் குழுவினருடன் இணைந்து திவ்யா லீ நாயர் நடனமாடியுள்ளார்.

பாடலை நஸீஃப் முஹம்மது இயக்கி உள்ளார்.
பாடல் தயாரிப்பு: ப்ரித்வி சந்திரசேகர் பாடலை தயாரித்துள்ளார். டி. எஸ். எம். ஜி. ஓ மற்றும் பி. டி. ஓ. எஸ் புரொடக்ஷன்ஸ் வீடியோ அமைத்துள்ளனர்.
ஆண்ட்ரியா மற்றும் ஏடிகே இசை அமைத்துள்ளனர்.
ஆண்ட்ரியா, ஏடிகே மற்றும் பாபி பாத் பாடல் எழுதி உள்ளனர்.
ஆங்கில வரிகளை ஆண்ட்ரியா ராப்: ஏடிகே எழுதி உள்ளனர்.

பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=BzihkXIUQ94&feature=youtu.be

Leave A Reply

Your email address will not be published.