’தாதா 87” பட டைரக்டர் விஜய் ஸ்ரீ ஜி பிறந்த நாள்

பாலியல் தீண்டலுக்கு எதிராக டைட்டில் கார்ட் போட்டவர்

19

சாருஹாசன் நடித்த தாதா 87 படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீ ஜி. அவருக்கு இன்று பிறந்த நாள். பலரும் அவருக்கு வாழ்த்து பகிர்ந்த னர்.
சாருஹாசன் மூத்த நடிகர்களில் ஒருவர். கமலின் அண்ணன். நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த அவரை இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி மீண்டும் 87 வயதில் நடிக்க அழைத்து வந்து படம் இயக்கி வெளி யிட்டார். அப்படத்துக்கு பலத்த பாராட்டு கிடைத்தது, சாருஹாசன் தாதா வேடத்தில் டான்களுக்கெல்லாம் டான் ஆக நடித்திருந்தார் சாருஹாசன்.
வழக்கமாக திரைப்படங்கள் திஒடங்குவதற்கு முன் எச்சரிக்கை டைட்டில் கார்ட் காட்டப்படும். புகைபிடித்தல், மது அருந்தலுக்கு எதிரான அறிவுரை விளம்பரங்கள் எல்லா படங்களிலும் காட்டப் படும் தாதா87 படத்தில் கூடுதலாக பெண்கள் மீதான பாலியல் தீண்டலுக்கு எதிரான வாசகத்தை அதாவது பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டப்படி குற்றமாகும் என டைட்டில் கார்ட் வெளியிட்டிருந்தார் விஜய் ஸ்ரீ ஜி என்பது குறிப்பிடத்தக்கது
இப்படத்துக்கு இயக்குனர் மனோஜ்குமார், நடிகர் ரமேஷ்கண்ண உள்ளிட்ட பல கலைஞர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். விஜய் ஸ்ரீஜி அடுத்து பவுடர், பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தை இயக்குகிறார்.

தன்னுடைய வித்தியாசமான கண்ணோட்டத்தாலும், அழுத்தமான பதிவினாலும் அனைவரையும் தன பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் #VijaySriG #VSG யின் பிறந்த நாளைக்கு #Dhadha87 #PollathaUlagilBayangaraGame இணை மற்றும் துணை இயக்குனர்களின் விளக்க காட்சிப்பதிவு வெளியிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.