அமைச்சர் வெளியிட்ட யோகிபாபுவின் ’பேய் மாமா’ பட ஆடியோ

ஷக்தி சிதம்பரம். இயக்குகிறார்..

18

பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் ” பேய்மாமா ” இதில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள் ளார். கதாநாயகியாக மாளவி கா மேனன் நடித்துள் ளார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா, ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம் புலி, பவர்ஸ்டார், அனு மோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி என ஒரு காமெடி பட்டாளமே நடிக்கிறது. கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார் ஷக்தி சிதம்பரம். விக்னேஷ் ஏலப்பன் தயாரிக்கிறார்.

 


இப்படத்தின் ஆடியோ வெளி யீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. தமிழக செய்தி –விளம்ரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டு வாழ்த்தி பேசினார். பின்னர் படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது:
வடிவேலுவை இரட்டை வேடங்களில் நடிக்க வெச்சு இந்த படத்தை எடுக்கலாம் என்று முதலில் யோசித்திருந் தேன். சில பல காரணங்களால் அது நடக்கவில்லை. அப்போ தான் இம்சை அரசன் படத்தில் வடிவேலுவுக்கு பதில் யோகி பாபு நடிக்கவிருப்பதாக செய்தி வந்தது ஆனால் அந்த செய்தி உண்மை இல்லை, ஆனால் அந்த செய்தி மூலமாக நாம் ஏன் யோகிபாபுவை இந்த படத்தில் நடிக்க வைக்க கூடாதுன்னு தோணுச்சு அவரிடம் பேசினேன், இது வடிவேலுவுக்கு பண்ணின கதை’ன்னு சொன்னதும் முதலில் தயங்கினார் பிறகு ஓகே சொல்லிவிட்டார். இந்த படத்தில் யோகிபாபு ஒரு பிக் பாக்கெட் அடிக்கிறவர். அவரோட வாழ்க்கையில் நடக் கின்ற சம்பவங்கள் தான் படம். இதில் கொரோனா மாதிரி ஒரு விஷயமும் இருக்கு. வெளி நாட்டு மருத்துவக் கம்பெனி யுடன் சேர்ந்துக்கிட்டு இங்கே இருக்குற ஒருசிலர் ஒரு வைரஸை மக்களிடையே பரப்புகிறார்கள். அந்த வைரஸுக்கான மருந்தும் அவர்களிடம் இருக்கும். ஆனால் அதை உடனே வெளி யிடாமல் நோய் அதிகமாக பரவவேண்டும் என்று காத்தி ருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் தலைமுறை தலைமுறையாக சித்த மருத் துவ சேவையை செய்கின்ற குடும்பத்தை சேர்ந்த ஒருத்தர் அந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கிறார். இதை அறிந்த அந்த வெளிநாட்டு மருத்துவக்குழு அந்த சித்த மருத்துவக் குடும்ப்பதையே கொலை செய்துவிடுகிறார்கள். அவர்களது ஆவி யோகிபாபு வுடன் சேர்ந்து எதிரிகளை பழிவாங்கி எப்படி மக்களை வைரஸிலிருந்து காப்பாற்றி னார்கள், என்பதை முழுக்க முழுக்க காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு 2019 நவம்பர் மாதத்திலேயே முடித்துவிட் டோம். ஆனால் பிப்ரவரி, மார்ச்சில் தான் கொரோனாவே வந்துச்சு, இப்போ இருக்கிற நிலைமையும் எங்கள் கதைக் களமும் ஒன்றாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. படம் நிச்சயமாக OTT அதாவது ஒன்லி தமிழ்நாடு தியேட்டர் தான் என்றார் ஷக்தி சிதம்பரம்..
பேய் மாமா படத்தின் ஒளிபதிவை எம்.வி.பன்னீர் செல்வம் செய்கிறார். ராஜ் ஆர்யன் இசை அமைக்கிறார். ஆர்.ஜனார்த்தனன் அரங்கம் அமைக்கிறார். பிரீத்தம் எடிட்டிங் செய்கிறார். சாய் ராஜகோபால் வசன் எழுதுகி றார். தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ் ஸ்டண்ட் அமைக்கிறார், நோபல் நடன் அமைக்கிறார். ஷக்தி சிதம்பரம், ஏக்நாத் படல்கள் எழுதுகின்றனர். ஷங்கர்.ஜி தயாரிப்பு மேற்பார்வை செய்கிறார். மௌனம் ரவி – மணவை புவன் மக்கள் தொடர்பு செய்கின்றனர்.
ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் லியாகத் அலிகான், நடிகர்கள் யோகிபாபு, நட்டி,  ரமேஷ் கண்ணா, மனோபாலா, ரவிமரியா, வையபுரி, பவர் ஸ்டார், எம்.எஸ்.பாஸ்கர், லொள்ளு சபா மனோகர்,

 

Leave A Reply

Your email address will not be published.