விஜய் சேதுபதி மீது வன்மம் காட்டக்கூடாது

ராஜ்கிரண், பேரரசு அறிக்கை..

21

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழக்கை கதை 800 படத்தில் விஜய்சேதுபதி நடக்க ஒப்புக்கொண்ட தற்கு எதிர்ப்பு எழுந்தது.  பிறகு அப்படத்திலிருந்து விளக்கினார்.  இந்நிலையில் அவரது மகள் பற்றி மிரட்டல் விடுத்தார் ஒருவர். அவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டது.மிரட்டல் விட்டவருக்கு எதிராக திரையுலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

நடிகர் ராஜ்கிரண் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தம்பி விஜய்சேதுபதி,
ஒரு அற்புதமான மனிதர்.
இரக்க மனமும்,
ஈகை குணமும் கொண்டவர்.

தமிழ் உணர்வாளர், நல்ல பண்பாளர்.

அவரை நான் பார்த்ததோ,
அவருடன் பேசியதோ
இல்லையென்றாலும்,
அவரைப்பற்றி என் காதுக்கு வந்த
நல்ல செய்திகள் ஏராளம்…

அவருக்கு என்ன அழுத்தங்களோ,
800 படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு…
இப்பொழுது அதிலிருந்து விலகிவிட்டார்.

இந்த ஒரு சம்பவத்தை வைத்து,
அவரின் மகள் மீது வன்மம் காட்டுவது,
எந்த வகையிலும் ஏற்புடையதல்ல…
இது தமிழனின் பண்பும் அல்ல.

தமிழ் உணர்வு என்று,
வசனம் பேசினால் மட்டும் போதாது,
தமிழ்ப்பண்போடு வாழ்ந்து காட்ட வேண்டும்.

தமிழ் உணர்வு என்பது அவசியம் தான்.
அதற்காக தரம் தாழ்ந்து,
அவரையோ, அவர் குடும்பத்தினரையோ
விமர்சிப்பதென்பது ஈனத்தனமானது…

தமிழ் உணர்வை விட,
மனித நேயம் மேலானது.

மறைந்த தேசிய தலைவர் பிரபாகரனின்
வாழ்க்கையை முழுமையாக
படித்தவர்களுக்கு இது புரியும்…

 

இவ்வாறுராஜ்கிரண் கூறி உள்ளார்

இயக்குனர் பேரரசு வெளியிட்டுள்ள டிவிட்டர் மெசேஜ் :

 

Leave A Reply

Your email address will not be published.