விஜய் சேதுபதி படத்திலிருந்து நடிகை அதிதி ராவ் விலகல்..

ராசி கண்ணா ஒப்பந்தம்..

13

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் துக்ளக் தர்பார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கு கிறார்.


கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஹீரோயினாக அதிதி ராவ் ஹைத்ரி நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஊரடங்கு காரணமாக இதன் படப் பிடிப்பு தடைபட்டது. தற்போது ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் துக்ளக் தர்பார் பட படப்பிடிப்பும் தொடங்க உள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு கொடுத்த கால்ஷீட் தற்போது அதிதி ராவால் அட்ஜெஸ்ட் செய்து தர முடியவில்லை.

இதையடுத்து அதிதிக்கு பதிலாக ராசி கண்ணா விஜய் சேதுபதி ஜோடியாக துக்ளக் தர்பாரில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக படக் குழு தெரிவித்திருக்கிறது.
ராசி கண்ணா ஏற்கனவே சங்கத் தமிழன் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.