டைரக்டர் கே.ராஜேஷ்வர் மகன் இயக்கத்தில் பாபி சிம்ஹா ..

17

ஹீரோவாக நடித்துவரும் பாபி சிம்ஹா அதிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடிக்கிறார். வித்தியாச மான நடிப்புபால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக் கொண் டிருக்கும் பாபி சிம்ஹா தற்போது புதிய படமொன்றில் மீண்டும் நடிக்கிறார்.
5 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரப் பட உலகில் பிரபலமானவர் விக்ரம் ராஜேஷ்வர். அவர் பாபி சிம்ஹா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதற்காக பாபி சிம்ஹாவை அணுகியுள் ளார் இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர். கதையைக் கேட்டவுடன், நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்தி ருக்கிறார் பாபி சிம்ஹா.

 


தமிழ்த் திரையுலகில் முக்கிய மான படங்களின் பட்டியல் களை எடுத்துக் கொண்டால், அதில் ‘அவள் அப்படித்தான்’, ‘கடலோர கவிதைகள்’ உள்ளிட்ட படங்கள் இடம் பிடிக்கும். அந்தப் படங்களின் கதைக்கு சொந்தக்காரரான கே.ராஜேஷ்வரின் மகன் தான் விக்ரம் ராஜேஷ்வர்.
‘அவள் அப்படித்தான்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘கடலோர கவிதைகள்’, ‘சீவலப்பேரி பாண்டி’, மற்றும் பல படங் களின் கதை, திரைக் கதை,வசனம் எழுதியவர் கே.ராஜேஷ்வர். அதுமட்டு மல்லாமல், ‘நியாய தராசு’, ‘அமரன்’, ‘துரைமுகம்’, ‘அதே மனிதன்’, ‘இந்திர விழா’ மற்றும் பல படங்களையும் K.ராஜேஷ்வர் இயக்கியுள்ளார்.
பாபி சிம்ஹா நடிக்க விக்ரம் ராஜேஷ்வர் இயக்கும் கேங்க்ஸ்டர் படத்துக்கும் கே.ராஜேஷ்வர் தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகி றார். இதுவொரு வெற்றி படமாக தருவதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க வுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

 

Leave A Reply

Your email address will not be published.