தியேட்டர்கள் திறக்க முதல்வரிடம் அபிராமி ராமநாதன் கோரிக்கை..

19

திரை அரங்குகள் திறப்பதற்கு  அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தியேட்டர் அதிபர்கள் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் அபிராமி ராமநாதன் தலைமையில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு திரை அரங்கு மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தின் கவுரவ தலைவர் அபிராமி ராமநாதன் விடுத்துள்ள அறிக் கையில் கூறி இருப்பதாவது:

 

இன்று காலை அபிராமி ராம நாதன் தலைமையில் பன்னீர் செல்வம். அரூர் ராஜா,  இளங் கோ, சீனிவாசன், வெங்க டேஷ், சுப்பு மற்றும் பலர் அடங்கிய குழு ஒன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியை வீட்டில், சந்தித்து அவருடைய தாயார் மறைவு குறித்து துக்கம் விசாரித்தனர், பின்பு திரை அரங்குகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதற்கும் அவர் பரிவோடு எங்களை கேட்டு மருத்துவர் களிடன் கலந்தாலோசித்து விரைவில் திரையரங்குகளை திறப்பதற்கு ஆவண செய்கி றேன் என்று கூறினார்.
கடந்த 8 மாதமாக திரையரங் குகள் பூட்டி இருப்பதோடு வேலை ஆட்கள் மற்றும் இதர செலவுகளால் மிகவும் கஷ்டத் தில் இருக்கிறோம். ஆதலால் எல் பி டி வரி எட்டு சதவீதத் தை விட்டுக் கொடுக்க வேண் டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொண்டோம். அதற்கும் அவர் மற்றவர் களுடன் ஆலோசித்து ஆவண செய்கிறேன் என்று கூறினார்,
இவ்வாறு தமிழ்நாடு திரை அரங்கு மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தின் கவுரவ தலைவர் அபிராமி ராமநாதன் அறிகையில் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.