விஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவரை கைது செய்

15

 

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி அப்பிரச்னைக்கு  நன்றி! வணக்கம் சொல்லி முற்றுபுள்ளி வைதார். இந்நிலையில், அவர் இலங்கை தமிழர்களின் மனதை புரிந்துகொள்ளாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதை கண்டித்து, விஜய்சேதிபதியின் மகளை (வயது 14) பாலியல் வன்கொடுமை

செய்துவிடுவதாக (rithik) என்பவர் டுவிட்டரில் மிரட்டல் விடுத்தார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான மகேந்திர சிங் தோனியின் மகள் மற்றும் விராட் கோலி அவர்களின் மனைவி உள்ளிட்டவர்களை பற்றி சமூக வலைதளங்களில் ஆபாசமான பதிவிட்டுள்ளார் இதனை வன்மையாக கண்டித்தும் மேலும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் வண்ணம் இருக்க,திருவாரூர் SFI கூட்டமைப்புடன் திருவாரூர் மாவட்ட விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் கலந்து கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது.. சம்பந்தப்பட்டவரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட வேண்டும் என்றும், பெண்கள் பாதுகாப்பு சட்டம், குழந்தையை பாலியல் வன்கொடுமை சட்டம், மேலும் லோக்பால் சட்டத்தின் கீழ் அவரை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.