ஆவேசம் கொப்பளிக்கும் ஆர் ஆர் ஆர் டீஸர் வெளிவந்தது

ராஜமவுலி, ராமசரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்த கரங்கள்

15

எஸ்.எஸ்rராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என் டி ஆர் நடிக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் டீஸர் இன்று வெளியானது. பரந்து விரிந்த மலைகள், அடர்ந்த காட்டுப்பகுதி. மலைமுகடுகளிலிருந்து கொட்டும் அருவி என கண்கொள்ளா பசுமை கொட்டிக்கிடக்கும் அமைதி சூழ்ந்த பகுதியில் ஆக்ரோஷமாக பாய்ந்து வரும் ஜுனியர் என் டி ஆர் ஆவேசத்துடன் தீபிடித்த ஈட்டியை எறியும் காட்சியுடன் வெளியாகியிருக்கும் ஆர் ஆர் ஆர் பட  டீஸருக்கு ராம் சரண் குரல் கொடுக்க காட்சியின் பிரமாண்டம் கண்களை நிறைக்கிறது..

ஏற்கெனவே, ராமராஜூவாக ராம் சரண் தோன்றும் ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்த இயக்குநர் ராஜமவுலியும் அவரது RRR திரைக்குழுவும், தற்போது கொமாரம் பீம் ஆக என்டிஆர் மின்னும் அவதாரத்தை வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த டீஸர்…

 

RRR பட்ஜெட் மிக மிக பிரம்மாண்டமானது. ரூ.450 கோடி செலவில் உருவாகும் இப்படம், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராம ராஜூ, கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைத் தழுவி புனையப்பட்ட கதை.

Leave A Reply

Your email address will not be published.