தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி. ராஜேந்தர் போட்டி

தலைவர் பதவிக்கு போட்டியிடுவது ஏன்?

17

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் வரும் நவம்பர் 22 ம்தேதி நடக்கிறது, நீதியரசர் ஜெயச்சந்திரன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தி வைக்கிறார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்மனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்று டைரக்டர் டி.ராஜேந்தர் தனது அணியினருடன் வந்து தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது அணி சார்பில் செயலாளர் பதவிக்கு  போடியிடும்

டி.மன்னனும் இன்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இருவரும் அங்கு சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள பூட்டிய பெட்டியில் வேட்பு மனுக்களை போட்டனர்.

தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ், ஆர்.வி. உதயகுமார், மனோபாலா, சக்தி சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடும்  வேட்புமனு தாக்கல் செய்து விட்டு டி.ராஜேந்தர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
2020-22ம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் சத்தியத்தை தர்மத்தை நியாயத்தை உண்மையை நெஞ்சுரத்தை நிலைநாட்ட இன்று காலை இறைவன் அருளால் என்னு டைய வேட்புமனு என் சார்பாகவும் என்னுடைய அணியின் சார்பாகவும் தாக்கல் செய்தேன். இந்த தலைவர் பதவிக்கு பொருத்தமானவரை நெஞ்சுரத்தோடு இருக்கும் ஒருவரை, சட்டத்தோடும் எந்த கருத்தையும் எடுத்துச் சொல் லும் ஒருவர் வேண்டும் என என்னை மன்னன் தலைவ பதவிக்கு போட்டியிட முன்மொழிந்தார்.
இந்த சங்கம் ஒன்றாக இருக்க வேண்டும் அதற்கு நல்ல மனம் படைத்தவர்கள் அத்த னை பேரும் வலியுறுத்தியா தால்தான் தயக்கங்களை எல்லாம் மீறி சங்கத்தை மூடி வைக்கக்கூடது என்பதற்காக நான் தலைவர் பதவிக்கு போட்டியிட சம்மத்திதேன். மன்னன் செயலாளர் பதவிக்கும் அதைபோல் சந்திரபோஸ் இன்னொரு செயலாளர் பதவிக்கும் பொருளாளர் பதவிக்கு மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன், துணைத்தலைவர் பதவிக்கு முருகன், பிடி செல்வகுமார், மற்றும் அணியின் சார்பில் செயற்குழுவில் ஆர்வி உதயகுமார், மனோபாலா ஷக்தி சிதம்பரம், மனோஜ் குமார், சரவணன், கே,ஜி பாண்டியன், செல்வம், திருமலை, வை. ராஜா, ஷியாம், ஸ்ரீதர் உள்ளிட்ட வர்கள் செயற்குழுவிற்கு போடியிடுகின்றனர்.
சங்கத்துக்கு நிதி பற்றாகுறை இருக்கிறது, சங்கம் கோமா ஸ்டேஜில் இருக்கிறது என்றார்கள். கோமா ஸ்டேஜ் மாற்றி டிராமா ஸ்டேஜ் மாற்றி சங்கத்தை சினிமா ஸ்டேஜாக்கி விடுவோம். சங்கத்தை தூக்கி நிறுத்து வோம் என்ற முடிவோடுதான் என்ற உதவிக்கரம் நீட்டும் எண்ணத்துடன் போட்டியிடு கிறேன் . சிலர் சங்கத்திலிருந்து உடைத்துக்கொண்டு போய் விட்டார்கள். அதற்காக இது கிடப்பு சங்கமாகிப் போய் விடக்கூடாது. இது துடிப்பு சங்கமாக, கொள்கை பிடிப்பு சங்கமாக் இருக்க வேண்டும் என்று நாங்கள் வந்திருக்கி றோம்.
இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.