சூரரைப் போற்று டிரெய்லர் வெளியாகி டிரெண்டிங்கில் இணைந்தது

நவம்பர் 12ல் ரிலீஸ்

13

சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஜிவி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தை அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக் கப்பட்டது.
ஆனால் படம் வெளியிட என் ஓ சி (நோ அப்ஜெக்‌ஷன்) பிரச்னைகளால் பட ரிலீஸ் தள்ளி வைப்பதாக சூர்யா தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறும்போது, ‘சூரரைப் போற்று பிரம்மாண்ட அனுபவத்தை வார்த்தை களால் விளக்கி விட முடியாது. படத்தில் விமானப்படை சார்ந்த காட்சிகள் வருவது உங்கள் அனைவருக்கும் தெரி யும். அதனால் அது சம்பந்த மாக ஏராளமான நடைமுறை களும் அனுமதிகளும் பெற வேண்டி யிருந்தது. இப்படம் தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவதால் அது சம்பந்தமாக இந்திய விமானப்படையுடன் நாங்கள் தொடர்புகொண்டு அணுகி அவர்களது ஒத்து ழைப்பையும் பெற வேண்டி இருந்தது.படம் வெளியிடுவதற்கு முன் அவர்களிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டி இருப்பதால் பட வெளியீடு சற்றுத் தாமதம் ஆகிறது.இது வழக்கமான நடைமுறைதான்
வேறொன்றுமில்லை. கவலை வேண்டாம்’ என்றார்.
இந்நிலையில் சூரரைபோற்று படத்துக்கு என் ஓ சி கிடைத்து விட்டதாக பட தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் அறிவித்திருக்கிறார்.


’சூரரைப் போற்று’ படம் நவம்பரில் வெளியாக உள்ளது. முன்னதா   ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இப்படத்தின் டிரெய்லர் இன்று  வெளியானது. ஏர் உழுபவன் விமானத்தில் பறப்பான், விமான டிக்கெட் விலை 1 ரூபாய் என சூர்யா பேசும் அதிரடி வசனங்கள். அவரை விமான நிறுவனம் தொடங்கவிடாமல் தடுக்கும் அதிகார வர்க்கம் என ட்ரெய்லர் தூள் பறக்கிறது, விமான தரையிறங்க அனுமதிக்காதபோது சாலையில் விமானத்தை இறக்கும் ஆக்ரோஷம் என சூர்யாவின் அந்தர் செய்யும் அசத்தலான காட்சிகளுடன் டிரெய்லர் பரபரக்கிறது. மேலும் அதனை ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்க செய்திருக்கின்றனர். பட ரிலீஸ் நவம்பர் 12ம்  தேதி  என அறிவிக்கப்பட்டிருக் கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.