அக்‌ஷய்குமாரின் ’லக்‌ஷ்மி பாம்’ டைட்டில் ’லக்‌ஷ்மி’ ஆனது

ராகவா லாரன்ஸ் இயக்கிய இந்தி படம்..

13

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா இந்தியில்  லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார்., இதில் திருநங்கை வேடத்தில் அக்‌ஷய்குமார் நடித்திருக்கிறார்.இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இன்று இப்படத்தின் சென்சார் நடந்தது, படத்தை அதிகாரிகளுக்கு இயக்குனர் ராகவா லாரன்ஸ் படத்தை திரையிட்டு காட்டினார்.

பிறகு ரசிகர்களின் சென்டிமென்ட்டை மனதில் கொண்டு படத்தின் பெயரை லக்‌ஷ்மி பாம் என்பதற்கு பதில் லக்‌ஷ்மி என தயாரிப்பாளர் சபீனா கான், துஷார் கபூர் மற்றும் அகஷய்குமார் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அக்‌ஷய்குமார். கியாரா அத்வானி நடிக்கும் இப்படத்துக்கு லக்‌ஷ்மி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வரும் நவம்பர் மாதம் 9ம் தேதி இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் விஐபியில் ரிலீஸ் ஆகிறது.

Leave A Reply

Your email address will not be published.