திரையரங்குகளை திறக்க வழி வகுத்தது தீபாவளி: டி.ராஜேந்தர் அறிக்கை

முதல்வர்-செய்தி துறை அமைச்சருக்கு நன்றி

13

7 மாத கொரோனா காலத்தில் மூடியிருந்த சினிமா திரை அரங்குகளை நவம்பர் ஃப்ம் தேதி முதல் திறக்க தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறக்க அனுமதி அளித்தார். அவருக்கு டி.ராஜேந்தர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

 

இதுகுறித்து சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.தலைவர் –  டி. ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

திரையுலகை திக்குமுக்காட வைத்தது பல வலி,
திரையரங்குகளை திறக்க வழி வகுத்தது தீபாவளி,
திரையுலகினரின் வாழ்வில் தெய்வ அருளால் வீசட்டும் தீப ஒளி.

திரையரங்குகளை நவம்பர் 10ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன இயங்க அனுமதி வழங்கி திரைத்துரையினரின் வாழ்வில் ஓளி வீச வழி வகுத்து தமிழக திரையுலகிற்கு நம்பிக்கை ஒளி ஏற்றிய ஒளிவிளக்கு புரட்சித்தலைவர் வழி வந்த புரட்சித்தலைவி அம்மா அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர்  எடப்பாடி K. பழனிச்சாமிக்கும்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜுக்கும், ஏனைய அனைத்து தமிழக அமைச்சர்களுக்கும் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு இ.ராஜேந்தர் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.