எனக்கும், அப்பா தொடங்கிய கட்சிக்கும் சம்பந்தமில்லை..

நடிகர் விஜய் விளக்கம்..

20

நடிகர் விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறுகிறது கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் நடிகர் விஜய் என்று பரபரப்பாக வாட்ஸ் அப்பி லும் தொலைக் காட்சியிலும் செய்தி பரவி வருகிறது.
இதுபற்றி விஜய் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

இன்று என் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடங்கள் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கி உள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ, மறைமுக மாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என் திட்ட வட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மெற்கொள் ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியபடுத்திக் கொள்கிறேன். மேலும் எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனபதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் என் பெயரையோ புகைப் படத்தையோ எனது கில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரை யோ தொடர்பு படுத்தி ஏதேனும் விவகாரளில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப் படும் என்பதையும் தெரிவித் துக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜய் தரப்பில் வெளியிபட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.