7 மாதத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்கள் இன்று திறக்கப்பட்டன 

16

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த 7 மாதமாக தியேட்டர் கள் மூடப்பட்டிருந்தன.
தியேட்டர் அதிபர் கள் மத்திய மாநில அரசுக்கு தியேட்டர் திறக்க அனுமதி கேட்டு  கோரிக்கை வைத்த னர். கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால்  தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் தமிழகத் தில் அனுமதி கிடைக்க வில்லை.
தமிழ்நாடு திரை அரங்கு மல்டி பிளக்ஸ் சங்கத்தினர் தமிழக முதல்வர் எடப் பாடி பழனி சாமியை நேரில் சந்தித்து  தியேட்டர் திறக்க அனுமதி கோரினர். அவர் அதை ஏற்று நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக் கைகளுடன் தியேட்டர் கள் திறக்க அனுமதி அளித் தார்.

7 மாதமாக  மூடிக்கிடந்த தியேட்டர்களை திறந்து சுத்தப்படுத்தும் பணிகளும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்தன. தமிழகத்தில் மொத்தம் 1 140 தியேட்டர்கள் உள்ளன பல தியேட்டர்கள் திறக்கப்பட் டாலும் செவ்வாய் கிழமை சென்டிமென்ட்டால் சில தியேட்டர்கள் திறக்கப்பட வில்லை.  நேற்று முதல் சில திரை அரங்குகளில் டிக்கெட் முன்பதிவும் நடந்து வந்தது

.கொரோனா தடைக்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் அந்தந்த தியேட்டர்களில் இன்று திரையிடப்பட்டது. ரசிகர்கள் கூட்டமும் குறை வாகவே இருந்தன. தனி தியேட்டர்களில்  சிவாஜி,  பாப நாசம்,  துப்பாக்கி, பிகில், விஸ்வாசம்,  அசுரன், ஹரிஸ்  தாராள பிரபு மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பரியேறும் பெருமாள், ஓ மை கடவுளே, திரெளபதி போன்ற படங்களை திரையிட்டு உள்ளனர்.சமூக இடை வெளி கடைபிடிக்கும் வகை யில் ஒரு சீட் காலியாக விட்டுத்தான் அடுத்த சீட் டில் ரசிகர்கள் அமரவைக்கப் பட்டனர்.

தியேட்டர்களில் விபிஎப் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தயாரிப்பாளர்கள் புதிய படம் எதுவும் ரிலீஸ் செய்யவில்லை.

Leave A Reply

Your email address will not be published.