சுசீந்தரன் இயக்கத்தில் ஜெய்30 திரைப்படம் !

இசை அமைப்பாளராகவும் அவதாரம்

16

சுசீந்தரன் இயக்கத்தில் நடிக்கிறார் ஜெய். இது இவரது 30வது படம்.
“கதைதான் ராஜா” எனும் வெற்றி சூத்திரம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. இதை முழுதாக நம்புபவர்கள் அதை கடைப்பிடித்து அவர் களின் வெற்றிக்கனவை எளிதாக வென்றிருக்கிறார்கள். இந்த சூத்திரத்தை கடைப் பிடித்து வெளிவரும் அனைத்து படங்களுமே மொழி எல்லைகள் கடந்து அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படும் படைப் பாக மாறியுள்ளது. அந்த வகையில் பெரும் கனவுக ளுடன் லெண்டி ஸ்டுடியோஸ் (Lendi Studios) சார்பில் எஸ் .ஐஸ்வர்யா தயாரிப்பாளராக கோலிவுட்டில் தன் திரைப் பயணத்தை துவங்கியிருக் கிறார். இவரது அறிமுகத் தயாரிப்பான “புரடக்‌ஷன் நம்பர். 1” படம் இயக்குநர் சுசீந்தரன் இயக்க நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகும் 30 வது திரைப்படமாக உருவாகி யுள்ளது. மீனாட்சி இப்படத் தில் நாயகியாக நடிக்கிறார். சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள் தாஸ், இயக் குநர் முக்தார் கான் ஆகியோ ருடன் மேலும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


தயாரிப்பாளர் எஸ்.ஐஸ்வர்யா கூறியதாவது:
லெண்டிஸ் ஸ்டிடுயோ உடைய முக்கிய குறிக்கோள் என்பது நேர்த்தியான வகை யில் தரமான படைப்புகளை தருவதென்பதே ஆகும் அந்த வகையில் அனைத்து ரசிகர் களும் கொண்டாடும் வகை யிலான அழகான கதையுடன் இயக்குநர் சுசீந்தரன் சார் எங்களை அணுகியது பெரும் மகிழ்ச்சியை தந்தது. தரமான கதைக்களம் கொண்டுள்ள இப்படம் எங்களது முதல் தயாரிப்பாக உருவாவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி யை அளித்துள்ளது. முழு நேர்த்தியுடன் தரமான படங் களாகவும், அதே நேரம் ரசிகர்கள் உற்சாகமாக கொண் டாடும் படியான படைப்பு களை தொடர்ந்து எங்கள் நிறுவனம் மூலம் தயாரிப் போம். எங்கள் தயாரிப்பில் உருவாகும் முதல் படைப்பு நடிகர் ஜெய்யின் 30 வது திரைப்படமாகவும் உருவா வது மேலும் மகிழ்ச்சியை தந்துள்ளது. எங்கள் அனை வருக்கும் இப்படம் ஒரு பெரும் மைல்கல்லாக அமை யும்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டு விட்டது படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு மற்றும் திரைப்பட வெளியீட்டு தேதிகள் மிக விரைவில் வெளி யிடப்படும் என்றார்.
படத்தின் நாயகனாக நடித் திருக்கும் நடிகர் ஜெய் முதல்முறையாக இப்படத் திற்கு இசையமைப்பாள ராகவும் பணியாற்றியுள்ளார். ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு எம். காசி விஸ்வநாதன் .கலை இயக்கம் – B சேகர் . நடனம் ஷோபி பால்ராஜ். சண்டைப் பயிற்சி – தினேஷ் காசி. பாடல்கள் வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி.

Leave A Reply

Your email address will not be published.