மாசில்லா தீபாவளி கொண்டாடுவோம்!

16

ஒரு குப்பை கதை, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்கள் மூலம் எண்ணற்ற ரசிகர்களை பெற்ற, மனிஷா யாதவ் மீண்டும் சென்னையில் குடியேற இருக்கிறார்.

அவர் அளித்த பேட்டி:

கொரோனாவால் ஆறு மாதங்கள் சிரமமாகவே சென்றாலும், குடும்பத்தோடும், செல்லப் பிராணிகளோடும் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. கொரோனா காலத்தில், சாலையோர நாய்களுக்கு உணவு கொடுத்து வந்தேன்.

தீபாவளி முடிந்ததும் சென்னையில் குடியேற இருக்கிறேன். இந்தப் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற வரையறை எதுவும் இல்லை. நடிக்க வாய்ப்புள்ள, சவாலான படங்களில் நடிக்க வேண்டும் என ஆசை.

இந்த ஆண்டு தீபாவளியை, மாசில்லாமல் கொண்டாடவேண்டும். வெடி சத்தத்தால் நிறைய பறவைகள், விலங்குகள் பாதிக்கின்றன. இந்த ஒளிமயமான தீபாவளிக்கு, நாம் ஒவ்வொருவரும் கொரோனாவை கடந்து, வாழ்க்கையில் ஒளி ஏற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.