எந்த ஹீரோவை பிடிக்கும் – நிதி அகர்வால் பேட்டி

16

சுசீந்திரன் டைரக்ஷனில் சிம்பு ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளேன். பூங்கொடி என்ற கிராமத்து பெண் வேடம். வேகமாக ஷூட்டிங் முடிந்துவிட்டது. சிம்பு நடிக்க வந்து 33 வருடங்கள் ஆகிவிட்டது. நான் நடிக்க வந்து மூன்று வருடங்கள் தான் ஆகிறது.

படத்தில் எனது சிஸ்டர் ஆக நந்திதா நடித்தார். பொதுவாக இரண்டு நடிகைகள் சேர்ந்தால் சண்டை வரும் என்று சொல்வார்கள். ஆனால் நாங்கள் இருவரும் கடைசிவரை சண்டை போடவே இல்லை.

உதயநிதி ஜோடியாக மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். தவிர தெலுங்கில் ஓரிரு படங்களில் நடித்து வருகிறேன். ஹீரோயினாக நடிப்பது என் லட்சியம். அந்த கேரக்டர் கற்பனைக்கும் எட்டாத இருக்க வேண்டும்.

எல்லா ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவதால், குறிப்பிட்ட ஹீரோவை தான் பிடிக்கும் என்று சொல்லி பிரச்னையில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. நயன்தாரா த்ரிஷாவின் நடிப்பு ரொம்ப பிடிக்கும்.

சிம்புவுடன் நடித்த போது அவரது கடந்த கால காதல் பற்றி எதுவும் பேசவில்லை. எனக்கு நடனத்தில் அதிக ஆர்வம் உண்டு பாடத் தெரியாது ஓரிரு படங்கள் கழித்து நானே டப்பிங் பேசும் அளவிற்கு தயாரானேன்.

மணிரத்னம் டைரக்ஷனில் நடிக்க விருப்பம், அவர் கேட்டால் என் கேரக்டருக்காக மொட்டை அடித்துக் கொண்டும் நடிப்பேன்.

Leave A Reply

Your email address will not be published.