புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி காலமானார்..

13

பல்வேறு படங்களில் குணசித்ரம், கோயில் பூசாரி வேடங்கள் மற்றும் காமெடி வேடங்களில் நடித்தவர் தவசி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தர். சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர். நடிகர்கள்  சிம்பு, சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா, சூரி, ரோபோ சங்கர் போன்றவர்கள் அவருக்கு நிதியுதவி செய்தனர்.

உடல் நலம் பெற்று வருவார்  மீண்டும் நடிக்க வருவார்  என்று  எதிர்பார்த்தநிலையில்  தவசி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர்  இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.